மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

Mahendran

திங்கள், 27 அக்டோபர் 2025 (13:43 IST)
இந்தியாவில் நடந்து வரும் 13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றுமுடிவடைந்தன. இதில், முதல் நான்கு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. மற்ற நான்கு அணிகள் வெளியேறின.
 
அரையிறுதி சுற்று அட்டவணை உறுதியாகியுள்ளது:
 
முதல் அரையிறுதி: அக்டோபர் 29ஆம் தேதி கவுகாத்தியில், இங்கிலாந்துக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெறுகிறது.
 
இரண்டாவது அரையிறுதி: அக்டோபர் 30ஆம் தேதி நவி மும்பையில், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுடன், ஆஸ்திரேலியா பலப்பரீட்சை செய்கிறது.
 
இந்த ஆட்டங்களில் வெற்றிபெறும் அணிகள், நவம்பர் 2ஆம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் உலகக் கோப்பைக்காக மோதும். 

இந்த தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்