இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், விராட் கோலி அபாரமாக விளையாடினார். அவர் 98 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 84 ரன்கள் அடித்தார். அவருக்கு துணையாக, கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடினர்.
இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.