யுவ்ராஜ் கொடுத்த ஜெர்ஸியை குப்பைத் தொட்டியில் போட்டார் பிராட்… தந்தை பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 30 அக்டோபர் 2025 (08:46 IST)
ஸ்டூவர்ட் பிராட் என்ற பெயரை கேட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவ்ராஜ் சிங் அவரது ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததுதான். ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஸ்டூவர்ட் பிராடின் கிரிக்கெட் வாழ்க்கையில் அது மிகப்பெரிய சறுக்கலாகும். ஆனால் அதிலிருந்து மனம் தளராமல் மீண்டும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு  டெஸ்ட் அரங்கில் மீண்டு வந்தார்.

ஆண்டர்சனோடு இணைந்து அவர் இங்கிலாந்து அணிக்காகப் பல அளப்பரிய சாதனைகளை டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். 600 விக்கெட்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய அவர் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவரின் தந்தை கிறிஸ் பிராட் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “யுவ்ராஜ் சிங் கையெழுத்திட்ட இந்திய ஜெர்ஸி ஒன்றை நான் என் மகனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தேன். ஆனால் அதை அவர் விரும்பவில்லை. அதைப் பார்த்துக் கடுப்பான அவர் அந்த ஜெர்ஸியைக் குப்பைத் தொட்டியில் போட்டார். என்னுடைய நகைச்சுவையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்