சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு பெருமை சேர்க்கும் வகையில், ரசிகர்கள் பிசிசியைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில், சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு அடையாளமாக இருப்பது அவரது 7 ஆம் எண்கொண்ட ஜெர்சிதான்.
எனவே இந்த ஜெர்சியை வேறு ஒருவர் அணிவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என தெரிவித்து, தோனிக்கு புகழாரம் சூட்ட 7 ஆம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.