வெற்றி பெறுவோம் என நினைத்தோம் : கோலி

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (21:33 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய முதலாம் டிவென்டி - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
 
’இன்றைய பிரிஸ்பேன் போட்டியில் முதலில் பீல்டிங் தேர்வு செய்து நன்றாகவே செயல்பட்டோம்.ஆஸ்திரேலிய அணி மொத்தம் 174 ரன்கள் எடுத்திருந்தது.முன்னர் ஆஸ்திரேலியா பேட்டிங்கின்  போது மழை குறுக்கிட்டது.அதனால் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி எங்களுக்கு 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. நெற்றிக்கு 174 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
 
ஆனால் களமிறங்கி ஆடிய இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போட்டியில் தினேஷ்கார்த்தி - பண்ட் ஜோடி சிறப்பாக விளையாடினார்கள். ஆயினும் தோல்வியை தழுவியுள்ளோம்.’ இவ்வாறு அவர் கூறுயுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்