இந்திய அணியின் முக்கிய வீரராக நடராஜன் வருவார் –ஆருடம் சொன்ன முன்னாள் வீரர்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (17:34 IST)
இந்திய அணியில் தேர்வாகியுள்ள நடராஜன் முக்கிய வீரராக வருவார் என விவிஎஸ் லட்சுமனன் தெரிவித்துள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். அதனால் இந்த ஆண்டு சீசனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு நடராஜன்தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார். அவரைப் பற்றி பேசியுள்ள சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகர்களில் ஒருவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான லட்சுமனன் ‘நடராஜன் இந்திய அணியில் முக்கிய வீரராக திகழ்வார். அவர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பையிலும் ஒரு சிறந்த தேர்வாக இருக்க முடியும். கடைசி ஓவர்களில் சிறப்பாக வீசும் பவுலர்களில் அவர் ஒருவராக இருப்பார். இடதுகை பந்துவீச்சாளராக இருப்பது அவருக்கு கூடுதல் பலம். ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்