கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு?

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (22:03 IST)
ஆஸ்திரேலியாவில் வெற்றிநடை போட்ட இந்திய அணி, நியூசிலாந்திலும் வெற்றியை தொடர்கிறது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், வரும் 28ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் 31ஆம் தேதி 4வது ஒருநாள் போட்டியும், பிப்ரவரி 3ஆம் தேதி 5வது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதில் 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கு விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன்பின்னர் நடைபெறும் 3 டி-20 போட்டிகளிலும் விராத் கோஹ்லி விளையாட மாட்டார். எனவே 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கும் டி-20 போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்