உஸ்மான் கவாஜாவின் சகோதரருக்கு 4.5 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (17:29 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவின் அண்ணனுக்கு 4.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

உஸ்மான் கவாஜாவின் அண்ணன் அர்சலான் தாரிக் கவாஜா தனது சக ஊழியர் ஒருவரை பயங்கரவாதி போல சித்தரித்து வழக்குகளில் சிக்கவைத்தார். இதற்குக் காரணம் தங்கள் இருவருக்கும் பொதுவான தோழி ஒருவரை அந்த நபர் காதலிக்கிறார் என்று அவர் சந்தேகப்பட்டதுதான். இதனால் அந்த நபர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் விசாரணையில் தாரிக் கவாஜாவின் சதிவேலைகள் அம்பலமாகின.

இதையடுத்து அவர் மீது வழக்க்ப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இப்போது அவர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.  4 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதித்தார். இதில் 2 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு பரோல் கிடையாது.

இந்நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட நிஜாமுதீன் மனநிலை பாதிக்கப்பட்டு இப்போது இலங்கையில் உள்ளார். பயங்கரவாதி என முத்திரைக் குத்தப்பட்டாதால் அவரால் அமெரிக்காவில் இருக்கும் அவரின் வருங்கால மனைவியைக் கூட சந்திக்க செல்ல முடியவில்லை. தனது அண்ணனின் செயலுக்காக தான் வெட்கி தலைகுணிவதாக கவாஜா தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்