தமிழகத்திற்கு எதிராக களமிறங்கிய கர்நாடகா இறுதிப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை 151 ரன்களில் முடித்தது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழக அணியும், கர்நாடகாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் ஷங்கர், பவுலிங் தேர்வு செய்துள்ளார். முதலில் களமிறங்கிய கர்நாடகா இறுதிப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை 151 ரன்களில் முடித்தது. மிடில் ஓவரில் மனோகரிடம் இருந்து நல்ல மீட்சி மற்றும் பிரவின் துபே மற்றும் சுசித் ஆகியோரிடமிருந்து இன்னும் சிறப்பான ஃபினிஷிங் இருந்தது. அதிகபட்சமாக அபினவ் மனோகர் 46, பிரவீன் 33 மற்றும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு அணி அந்த பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் இந்த போட்டியில் விளையாடி வருகிறது. 152 ரன்கள் எடுத்தால் இந்த சீசனில் சாம்பியன் பட்டம் தமிழகம் வசமே இருக்கும்.