நாணயமான வீரர் ரோஜர் ஃபெடரர்! – சுவிட்சர்லாந்து அரசு கௌரவம்!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:10 IST)
டென்னிஸ் சாம்பியன் ரோஜர் பெடரரின் உருவப்படத்தை நாணயங்களில் பொறிக்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். இந்த வருடம் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான இறுதி போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார் பெடரர். அதில் ஃபெடரர் தோல்வியடைந்தாலும் சுமார் 4 மணி நேரம் 57 நிமிடங்கள் அந்த ஆட்டம் நீடித்தது.

உலகிலேயே அதிக நேரம் நடந்த டென்னிஸ் ஆட்டம் என்ற புதிய சாதனையை அது படைத்தது. அதற்கு பிறகு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் விளையாடியதன் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார் ரோஜர். இந்த பட்டியலில் மூன்றாவதாக இடம்பிடிப்பது ரோஜட் ஃபெடரருக்கு இது 15வது முறையாகும்.

அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்து அரசாங்கம் 20 சுவிஸ் பிராங்க் நாணயங்களில் முக்கியமான நபர்களின் உருவப்படங்களை பொறித்து வெளியிட உள்ளது. அதில் ரோஜர் ஃபெடரர் பெயரும் இடம் பெற்றுள்ளது. சுவிஸ் வரலாற்றிலேயே உயிரோடு இருக்கும்போதே நாணயத்தில் உருவம் பொறிக்கப்படும் முதல் நபர் ரோஜர் ஃபெடரர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்