டி 20 உலகக்கோப்பை தொடரை இப்படி நடத்தலாம்! சுனில் கவாஸ்கர் ஐடியா!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (08:28 IST)
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்தலாம் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கொப்பைத் தொடரே நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து யாரும் வரக் கூடாது என்ற எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடரை நடத்த இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஒரு ஆலோசனை தெரிவித்துள்ளார். அதன் படி ‘அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்திக் கொண்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்