ஒற்றை நபராக போராடிய கோலி; முதல் இன்னிங்ஸில் தப்பிய இந்தியா

திங்கள், 15 ஜனவரி 2018 (19:46 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இன்னிக்ஸில் 307 ரன்கள் குவித்தது.

 
தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் போராடி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. 
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மட்டும் ஒற்றை நபராக இருந்து போராடி சதம் விளாசினார். 153 ரன்கள் குவித்தார்.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டை இழந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் மூன்றாவது நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் குவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்