தென் ஆப்பரிக்கா 335 ரன்கள் குவிப்பு; இலக்கை துரத்த தொடங்கிய இந்தியா

ஞாயிறு, 14 ஜனவரி 2018 (16:39 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் குவித்தது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் கடைசி நேரத்தில் தடுமாறியது விக்கெடட்டை இழக்க தொடங்கியது. முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.
 
இரண்டாவது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பரிக்கா 335 ரன்கள் குவித்தபோது ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
 
தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் ராகுல் களமிறங்கியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்