பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட வேண்டும்: சச்சின் சர்ச்சை கருத்து

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (19:15 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பின் ஒட்டுமொத்த இந்தியாவே பாகிஸ்தானின் உறவை முழுதாக துண்டிக்க வேண்டும் என்றும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்றும், பாகிஸ்தானுடன் எந்த போட்டியும் விளையாட கூடாது என்றும், பாகிஸ்தான் அணியை உலகக்கோப்பை போட்டியில் விளையாட தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில்  லிட்டில் மாஸ்டர் சச்சின் கருத்து சற்று வித்தியாசமாக உள்ளது. உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடாமல் அந்த அணிக்கு 2 புள்ளிகள் சும்மா தாரை வார்க்க வேண்டுமா? அதனை நான் வெறுக்கிறேன். உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவை இதுவரை பாகிஸ்தான் வென்றதே இல்லை. தற்போதைய நிலையில்  பாகிஸ்தானை காட்டிலும் இந்திய அணி வலுவானது. ஆனாலும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்
 
என்னை பொறுத்தவரை இந்தியா என்ற நாட்டிற்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுப்பேன். எனவே என்னுடைய நாடு என்ன முடிவுகள் எடுக்கிறதோ அதற்கு என் இதயத்திலிருந்து ஆதரவு அளிப்பேன்' என்று சச்சின் கூறியுள்ளார். சச்சினின் கருத்துக்கு கலவையான விமர்சனங்கள் நெட்டிசன்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்