3 வது டெஸ்ட் போட்டி : ரோஹித் சர்மா முதலாவது இரட்டை சதம் !

ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (13:55 IST)
தென் ஆப்பிரிக்க  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டியிலும்   இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 3 வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் இன்று , தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும்  2 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிவீரர் ரஹானே சதம் அடித்தார்.  மற்றொரு முனையில் ஆடிய ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
 
நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் ரோஜித் சர்மாவும்.  ரஹானேவும் ஆட்டத்தின் போக்கை கனித்து நிதானமாக ஆடினர். நேற்றைய நாள் ஆட்டத்தின் ரோஹித் சர்மா சதம் அடித்தார். ஸ்கோரும் சீராக  உயர்ந்தது. இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்த ரஹானே 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
 
தொடர்ந்து மற்றொரு முனையில்  ஆடிய ரோஹித் சர்மா   கடைசி டெஸ்டின் இரண்டாவது ஆட்டத்தின் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதம் அடித்தார். அவர் 225 பந்துகளில் 28 பவுண்டரி , 6 சிக்சர்கள் உள்பட 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்