மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 20 ஓவர்கிரிக்கெட்தொடரைவைத்து 50 ஓவர்கிரிக்கெட்அணியைத்தேர்வுசெய்யமுடியாது எனக் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கிவரும் வேளையில் அனைத்து அணிகளும் அணியை தயார் செய்வதில் குறியாக உள்ளனர். சில நாடுகள் உலகக்கோப்பை அணியை அறிவித்து விட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னமும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை.
அணித்தேர்வில் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அதை மறுத்துள்ளார். அந்த கருத்தை இப்போது துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இணையதள தொடக்க விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் ‘உலகக்கோப்பைக்கான இந்திய அணித்தேர்வில் ஐபிஎல் போட்டிகளின் தாக்கம் இருக்காது. 20 ஓவர் போட்டிகளைக் கொண்டு 50 ஓவர் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்யமுடியாது. நாங்கள் கடந்த ஆண்டுகளில் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளோம். அதை வைத்தே எங்களை எடைபோட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணிக்கான வீரர்கள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவும் ஒரு சில இடங்களுக்கான வீரர்கள் மட்டுமே இன்னும் முடிவாகவில்லை எனவும் அதை பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தேர்வாளர்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.