ஸ்டம்ப்பை தள்ளிவிட்ட ரோஹித்துக்கு அபராதம் – எல்லை மீறும் கேப்டன்கள் !

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (14:17 IST)
நேற்றைய போட்டியின் போது அவுட் ஆன விரக்தியில் ஸ்டம்ப்பை தட்டிவிட்ட ரோஹித் ஷர்மாவின் செயல் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடர்ந்து 6 போட்டிகளில் அடைந்துவந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 233 ரன்கள் இலக்க்கைத் துரத்தி சென்ற மும்பை அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதில் மும்பை அணியின் கேப்டன் 12 ரன்களில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆன போது டிஆர்எஸ் முறையை நாடினார். ஆனால் அதிலும் அவுட் என முடிவு வர விரக்தியில் ஸ்டம்ப்பை தட்டி விட்டார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து நடுவர்கள் ரோஹித் ஷர்மாவுக்குப் போட்டிக்கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளனர். இதற்கு முன்னர் சென்னை அணியின் கேப்டன் தோனி விதிமுறைகளைத் தாண்டி மைதானத்திற்குள் வந்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால் அவர்கள் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபிஎல்-ல் அஸ்வின், தோனி, ரோஹித் ஷர்மா என கேப்டன்கள் இதுபோல சர்ச்சைகளில் சிக்கிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்