அதிக ரன்கள், அதிக அரைசதம், அதிக சிக்ஸ் – ஒரே மேட்ச்சில் 3 சாதனைகள் !

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (10:42 IST)
நியூஸிலாந்துக்கு எதிரான நேற்றைய 2வது டி20 போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா இருபது ஓவர் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நேற்றைய நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் அதிரடி அரைசதம் பெரிதும் உதவியது. மேலும் இந்த போட்டியின் போது 3 சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஹிட்மேன் ரோஹித்.  போட்டியின் போது 34 ரன்கள் எடுத்த போது இருபது ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் நிக்ழ்த்தியுள்ளார். இந்த சாதனையை அவர் 92 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் நியுசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 74 இன்னிங்ஸ்களில் 2272 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். அவரை இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளி ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 2263 ரன்களுடன்  மூன்றாம் இடத்திலும், இந்தியாவின்  கோஹ்லி  2167 ரன்களுடன் நான்காம்  இடத்திலும் நியுசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 2140 ரன்களுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

நேற்றையப் போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்தது அவரது 20 ஆவது அரைசதமாகும். இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்துள்ள வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் மற்றொரு சாதனையாக சர்வதேசப் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 102 சிக்ஸர் அடித்துள்ள ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல் மற்றும் மார்ட்டின் குப்தில் ஆகியோரின் முதல் இடத்தை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவை. இருவரும் 103 சிக்ஸர்களை அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்