அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிய ரோஹித் 57 ரன்களில் கோல்டர் நைல் பந்தில் விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் கேப்டன் கோஹ்லியோடு இணைந்த தவான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 117 ரன்களில் அவுட் ஆக அதையடுத்து வந்த பாண்ட்யா அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார். பின்னர் கேப்டன் கோஹ்லியோடு சேர்ந்து தோனி கடைசி நேரத்தில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி 14 பந்துகளில் 27 சேர்த்து அவுட் ஆனார். அதையடுத்து அதே ஓவரில் கோஹ்லியும் 82 ரன்னில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்தது. ராகுல்11 ரன்களோடும் கேதார் ஜாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.