இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் 12 ஆவது ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து அணியும் வங்கதேசமும் மோதின. இதில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவதாக வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் வங்கதேச வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசிக் கொண்டிருந்தார்.
வங்கதேச பேட்ஸ்மேன் சவுமியா சர்க்கார் பேட் செய்து கொண்டிருந்த போது அசுர வேகத்தில் (கிட்டத்தட்ட 90 மைல்) அவர் வீசிய பந்து ஸ்டெம்புகளைப் பதம் பார்த்தது. ஸ்டம்புகளில் பட்ட பந்து மேல் நோக்கி எழும்பியது. அனைவரும் விக்கெட்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி போய் விழுந்தது. டிவி ரிப்ளையில் அதைக் காட்டிய போது ரசிகர்களும் வீரர்களும் மூக்கை விரல் வைத்தனர்.