தோனியை புகழ்ந்து தள்ளிய ரோஹித் சர்மா !

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (12:49 IST)
இந்திய அணியினர் தற்போது உலகில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாய் வலம் வந்து நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.
அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பவர் ரோஹித் சர்மா. இவர் முன்னாள் கேப்டன் தோனி குறித்து கூறியதாவது :
 
நம் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் தோனி. பல வெற்றிகளை பெற காரணமானவர்.  ஒருநாள் அணியில் அவர் இடம் பெற்றிருக்கிறார் என்பது அணிக்கு அவசியமாகும். அவர் பங்களிப்பு அவசியம் தேவைப்படும்.அவர் விக்கெட் கீப்பராக இல்லை என்றாலும் தேவையான ஆலோசனைகள் வழங்குகிறார். முக்கியமாக அணிக்கு ஆலோசனைகள் வழங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்