சபாஷ் ! கருணாநிதியை புகழ்ந்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி...

வியாழன், 3 ஜனவரி 2019 (12:36 IST)
நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய  சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது இரங்கள் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றினார்.
 
இந்த இரங்கள் தீர்மானத்தை  பேரவைத் தலைவர் தனபால் முன்மொழிந்தார். அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்., நெல் ஜெயராமன் , மருத்துவர் ஜெயசந்திரன் ,. எஸ்டி உக்கம்சந்த் மற்றும் காஜா புயலில் பலியானவர்களுக்கு இரங்கள் தீர்மானம் வாசித்தார். பின்னர் மறைந்தவர்களுக்கு சட்டசபை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
 
துணைமுதல்வர் ஒ.பன்னிர் செல்வம் இரங்கள் தீர்மானத்தில் கருணாநிதியை அண்ணாவின் பேரன்புத்தம்பி என்றும், அவருடைய அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்று  புகழாரம் சூட்டினார்.
 
 பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கள் தீர்மானத்தின் போது கூறியதாவது:
 
சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்தவர் கருணாநிதி. அதை அதிமுக சில நேரங்களீல் பின்பற்றி உள்ளது . பன்முக தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்த பெருமைக்குரியவர். தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வென்றவர் கருணாநிதி: அவருடைய சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு பேரவையில்   கருணாநிதியை புகழ்ந்து பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்