கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற புனே. சொந்த மண்ணில் கொல்கத்தா சோகம்

Webdunia
புதன், 3 மே 2017 (23:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் புனே அணி கடைசி ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.



 


கொல்கத்தாவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற புனே அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது. பாண்டே 37 ரன்களும், கிராந்தோமி 36 ரன்களும் எடுத்தனர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய புனே அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் புனே அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இரண்டு இடங்களில் மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்