கடைசி பந்தில் சிக்சர்.. ஆனால் ஸ்கோரில் கணக்கிடப்படவில்லை.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:28 IST)
இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியாவின் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தார். ஆனால் அந்த சிக்சர் கணக்கிடப்படாமல் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.  இங்க்லீஷ் மிக அபாரமாக விளையாடிய 110 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 209 என்ற இமாலய இலக்கை இந்தியா  விரட்டிய நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக 42 பந்துகளில் 80 ரன்கள், இஷான் கிஷான் அரைசதம் அடித்தனர்..

இந்த நிலையில்  இந்தியா கடைசி ஓவரில்  7 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடைந்ததால் 5 பந்துகளில் மூன்று ரன்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் இரண்டாவது பந்தில் அவர் ஒரு ரன் எடுத்த நிலையில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. ஆனால் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டதால் மீண்டும் ரிங்கு சிங் பேட்டிங் சைடு வந்தார்.

இந்த நிலையில் சிங்கிள் இந்தியா வெற்றி பெற ஒரு ரன் மட்டுமே தேவை இருந்த நிலையில் சிங்கிள் அடிக்க விடாமல் அனைத்து பீல்டர்கள் க்ளோஸாக நின்றனர். இந்த நிலையில் ரிங்கு சிங் அபாரமாக சிக்சர் அடித்தார். ஆனால் அந்த பந்து நோபால் என்பதால் அந்த நோபால் ரன்னில் இந்தியா வெற்றி பெற்று விட்டதால், அவர் அடித்த சிக்சர் கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்