ராஜஸ்தான் அணி அபார வெற்றி; மும்பை அணிக்கு 2வது தோல்வி!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (19:49 IST)
ராஜஸ்தான் அணி அபார வெற்றி; மும்பை அணிக்கு 2வது தோல்வி!
இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்
 
இதனையடுத்து  194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் 54 ரன்களும், வெர்மா 61 ரன்கள் எடுத்தபோதிலும், கேப்டன் ரோஹித் சர்மா உள்பட மற்றா பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனை அடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி அடைந்தது
 
கடந்த ஐபிஎல் தொடரில்  முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளுமே இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்