72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் மாபெரும் வெற்றி..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (19:32 IST)
ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யாஸ்வி ஜாஸ்மால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகிய இருவரும் தலா 54 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் எடுத்துள்ளார். 
 
இந்த நிலையில் 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் இழந்து தத்தளித்த நிலையில் இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
இதனால் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்