IPL 2022: ”இந்த” 4 அணிகளும் ப்ளே ஆஃப் செல்லும்… ரெய்னாவின் கணிப்பு!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (14:07 IST)
ஐபிஎல் 2022 சீசன் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. இதில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்தி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரரான ரெய்னாவை மிஸ்டர் ஐபிஎல் என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார். இந்த ஆண்டு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அவரை எந்த அணியும் ஏலத்தில் கூட எடுக்கவில்லை.

அதனால் அவர் இப்போது ஐபிஎல் போட்டிக்கான இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து இப்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்த செல்லும் நான்கு அணிகளாக தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ‘சிஎஸ்கே, ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகளை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்