மஞ்சள் ஜெர்ஸிக்காக என் மனம் ஏங்கியது! – வர்ணனையில் ரெய்னா உருக்கம்!

ஞாயிறு, 27 மார்ச் 2022 (11:53 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா வர்ணனையின்போது சிஎஸ்கே குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த பல சீசன்களாக ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் இந்த முறை ஐபிஎல் ஏலத்தின்போது சிஎஸ்கே அவரை விடுவித்த நிலையில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

அதனால் தற்போது தனது பணியை வர்ணனையாளராக தொடங்கியுள்ளார். இந்தி வர்ணனையாளராக நேற்று சிஎஸ்கே போட்டியை வழங்கிய அவர் “இந்த ஷோவுக்காக மைதானத்தை நான் கடந்து வந்துபோது என் மனதில் ஒன்று பட்டது. மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியை போட்டுக் கொண்டு மைதானத்துக்குள்போக எனது மனம் விரும்பியது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்