இந்தியா அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் ராகுல் டிராவிட்!

புதன், 12 மே 2021 (17:00 IST)
இந்திய அணி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சென்று லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

அப்போது இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனால் இலங்கைக்கு செல்ல ஷிகார் தவான் அல்லது ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதுமுக வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்