நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த வெற்றி

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (22:24 IST)
புரோ கபடி போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா அணியை வென்றது. அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்று புனே அணிக்கு எதிரான போட்டியில்  வெற்றி பெற்றது.

இன்று புனே அணிக்கு எதிராக நடந்த விறுவிறுப்பான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீர்ர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். அதேபோல் புனே வீரர்களும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். இருப்பினும் தமிழ் தலைவாஸ் அணி இறுதியில் 36-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் மும்பை அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 41-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. நாளை பெங்களூரு மற்றும் ஹரியானா அணிகளும், புனே மற்றும் மும்பை அணிகளும் மோதவுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்