பாராசின் ஓபன் செஸ் போட்டி; சாம்பியன்ஷிப் வென்ற பிரக்யானந்தா!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (10:30 IST)
செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் செஸ் தொடரில் சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா சாம்பியன்ஷிப் வென்றுள்ளார்.

செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல நாட்டு செஸ் வீரர்களும் கலந்து கொண்ட நிலையில் சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்யானந்தாவும் கலந்து கொண்டார்.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பிரக்யானந்தா 7 வெற்றி, 2 போட்டிகளில் சமநிலை என மொத்தம் 8 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். சென்னையில் 28ம் தேதி தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பிரக்யானந்தா விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்