சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதும் விளையாட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் நேற்று காலை 8.45க்கு தொடங்கியது. டிக்கெட்டை பெற ரசிகர்கள் ஏராளமானோர், திங்கட் கிழமை நள்ளிரவிலிருந்தே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் டிக்கெட் விற்பனை ஆரம்பித்த ரெண்டு மணி நேரத்திலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டதாக சேப்பாக்க மைதான நிர்வாகம் அறிவித்தது.
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறிகையில், 12 ஆயிரம் டிக்கெட்டை 2 மணி நேரத்தில் விற்க வாய்ப்பே இல்லை. இந்த டிக்கெட் விற்பனையில் பெரிய முறைகேடு நடைபெறுகிறது. இங்கு 1300, 2500 க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளை சவிகார்பேட்டையில் வட இந்தியர்கள் 3000, 6000க்கு விற்பனை செய்கிறார்கள் என குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து உண்மை நிலவரம் அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.