சென்னை அணி த்ரில் வெற்றி! டெல்லியை வீழ்த்தியது

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (05:41 IST)
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 5வது ஆட்டத்தில் சென்னை அணி இரண்டு பந்துகள் மட்டுமே மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. 
 
சென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. தோனி மற்றும் ஜாதவ் களத்தில் இருந்தனர். ஆனால் முதல் பந்தில் ஜாதவ் அவுட் ஆனதும் அதன் பின் களமிறங்கிய பிராவோ, இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காததால் போட்டி டென்ஷன் ஆனது. ஆனால் நான்காவது பந்தில் பிராவோ ஒரு பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனையடுத்து சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
ஸ்கோர் விபரம்:
 
டெல்லி அணி: 147/7  20 ஓவர்கள்
 
தவான்; 51 ரன்கள்
ரிஷப் பண்ட்: 25 ரன்கள்
பிபி ஷா: 24 ரன்கள்
 
சென்னை அணி: 150/4
 
வாட்சன்: 44 ரன்கள்
தோனி: 32 ரன்கள்
ரெய்னா: 30 ரன்கள்
 
ஆட்டநாயகன்: வாட்சன்
 
அடுத்த போட்டி: கொல்கத்தா- பஞ்சாப்
 
சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்