தோல்வி அடைய வேண்டிய போட்டியை டிரா செய்த பாகிஸ்தான்: பாபர் அசாம் அபாரம்

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (10:39 IST)
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் அந்த அணி டிரா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 556 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 97 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது 
 
இதனையடுத்து முதல் இன்னிங்சில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி 506 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது 
 
இதனையடுத்து இந்த போட்டியை டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அபாரமாக விளையாடி 196 ரன்கள் எடுத்தார் அதேபோல் முஹம்மது ரிஸ்வான் 104 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்