இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. வெற்றியை நெருங்கியது பாகிஸ்தான்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (08:20 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியை நெருங்கி விட்டதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி உள்ளனர்.
 
கடந்த 9ஆம் தேதி தொடங்கிய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 281 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 275 ரன்களும் எடுத்தன 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணிக்கு 355 ரன்கள் என்ற இலக்கை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் உள்ளது
 
தற்போது பாகிஸ்தான் அணியின் ஷகீல் அரைசதம் அடித்து அபாரமாக விளையாடி வருவதால் இவரது விக்கெட்டு விழுகாமல் இருந்தால் பாகிஸ்தானின் வெற்றி பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்