இந்தியாவின் Red Zone ஆக மாறிய முக்கிய 6 மெட்ரோ நகரங்கள்!

வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:10 IST)
இந்தியாவின் ஆறு முக்கிய மெட்ரோ நகரங்கள் கொரோனா காராணமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. 
 
இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் 6 முக்கிய மெட்ரோ நகரங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் அடக்கம். 
 
மேலும், 400 மாவட்டங்கள் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 718 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் என்றும், 207 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மையங்களாக மாறக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்