10 ரன்களில் 3 விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து: இந்திய பவுலர்கள் அபாரம்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை எடுத்து சற்றுமுன் நியூசிலாந்த அணி களமிறங்கியது.
அந்த அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததை எடுத்து தற்போது 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து தத்தளித்து வருகிறது.
முகமது ஷமி அபாரமாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கட்டைகளையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் நியூசிலாந்து அணி 100 ரன்களை கூட எடுப்பது சிரமம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் கான்வே மற்றும் கேப்டன் லாதம் ஆகியோர் இன்னும் களத்தில் உள்ளதால் நியூசிலாந்து ஸ்கோர் உயருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்