2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு

சனி, 21 ஜனவரி 2023 (13:08 IST)
2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நகரில் நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இந்தியா கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி இன்னும் ஒருசில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதலாவது ஒரு நாள் போட்டியை வென்ற இந்தியா இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்லுமா? அல்லது நியூசிலாந்து தனது வெற்றி கணக்கை தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்