கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நெல்லை.. DLS முறையால் தோல்வி அடைந்த சேலம்..!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (08:06 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற சேலம் மற்றும் நெல்லை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நெல்லை அணிவெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 16 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் என்ற நிலையில் திடீரென மழை வந்தது. இதனை அடுத்து நெல்லை அணி 16 ஓவர்களில் 129 ரன்கள் அடிக்க வேண்டும் என DLS முறையில் நிர்ணயிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் நெல்லை அணி கடைசி ஓவரில் எட்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் பந்தலிலேயே சிக்ஸர் அடித்த சுகேந்திரன் அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு சிங்கிள் அடித்து வெற்றியை தனது அணிக்கு தேடி தந்தார். 
 
இதனை அடுத்து புள்ளி பட்டியலில் நெல்லை அணி 6 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்