''நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் '' - அஸ்வின் ஓபன் டாக்

வெள்ளி, 16 ஜூன் 2023 (16:42 IST)
கடந்த வாரம்  உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- இந்திய அணிகள் விளையாடின. இப்போட்டியில், இந்திய அணி தோற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் வீரரான இருக்கும் அஸ்வின் இதுபற்றி கூறியுள்ளதாவது:  ''நமது அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் என் பங்களிப்பும் உள்ளது. அதனால் நானும் இறுதிப் போட்டியில்  விளையாட விரும்பினேன். இதற்கு முன்பு நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினேன். கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் பலவிதமான அளவுகோலின் கீழ் நடத்தப்படுவர். நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என்று சமூகவலைதளத்தில் கூறியிருந்தனர். நான் அதில் உறுதியாகவில்லை. இப்போட்டியில் இடம்பெற்றிருந்தால் நான் சிறப்பான ஆடியிருக்கலாம். இறுதிப் போட்டி முடிந்த பின் நான் டி.என்.பி.எல் கிரிக்கட்டில் கவனம் செலுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்