இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ''இந்தியா- இலங்கை போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் போட்டியில், இந்திய அணியினரின் பவுலிங் மோசமாக இருந்தது. சச்சின் அடித்த ரன்களை பந்து வீசுபவர்கள் ரன்களாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் ஒரு நாள் பவுலராகி அவர்களை விட நன்றாக பந்துவீச வேண்டும் என்று விம்பினேன். முதலில் நல்ல பேட்ஸ்மேனாக இருந்த நான் ஆப் ஸ்பின் பந்து வீச்சாளராக மாறினேன். நான் பந்து வீச்சாளராக மாறியிருக்கக் கூடாது என்பது நான் ஓய்வு பெறும் காலத்தில் வருத்தப்படும் ஒன்றாக இருக்கும் ''என்று கூறியுள்ளார்.