ரஞ்சிக் கோப்பைக்கான அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட நடராஜன்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:14 IST)
ரஞ்சிக்கோப்பைக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை.

இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவருக்கு தமிழக அணியிலும் வாய்ப்பில்லை எனும் சூழல் உள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறாத நிலையில் விரைவில் நடக்க உள்ள ரஞ்சி கோப்பைக்கான அணியிலும் அவர் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்