கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்த நடிகரா?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (21:27 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரபல கிரிக்கெட் வீரர்களான தோனி, சச்சின் டெண்டுல்கர் உட்பட பலருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் உருவாக இருப்பதாகவும் இது குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நடராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்