இன்னும் 20 நிமிடம் ஆகியிருந்தால் மூச்சுக்குழல் வெடித்திருக்கும்… ஐசியு அனுபவத்தைப் பகிர்ந்த ரிஸ்வான்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (11:25 IST)
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொடக்க ஆட்டக்காரராக முகமது ரிஸ்வான் இருந்தார். பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் ரிஸ்வான் 52 பந்துகளில் 627ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். 

போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சையில் அவர் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் மருத்துவமனை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு உள்ளார் ரிஸ்வான். அதில் ‘மூச்சு விட மிகவும் சிரமப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உடனடியாக எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் 20 நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் மூச்சுக்குழாயே வெடித்திருக்கும்’ என செவிலியர்கள் கூறினர்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்