டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற அணிகளுக்கே அதிக வெற்றி!

செவ்வாய், 16 நவம்பர் 2021 (15:02 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற அணிகள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது புள்ளி விவரங்களை தெரிய வந்துள்ளது.
 
 உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் இருபத்தி மூன்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 18 போட்டிகளில் சேஸிங் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 18 போட்டிகளில் 15 போட்டிகள் டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அபுதாபியில் டாஸ் வென்ற அணிகள் 7 முறையும் சார்ஜாவில் டாஸ் வென்ற அணிகள் ஐந்து முறையும் துபாயில் டாஸ் வென்ற அணிகள் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இறுதிப் போட்டியில் கூட ஆஸ்திரேலியா டாஸ் வென்றது என்பதும் இதனையடுத்து அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியை டாஸ் நிர்ணயம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்