நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று சொன்னதால் இந்திய அணி நடக்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.
இதனால் இந்திய அணியோடு இந்த தொடரில் விளையாடிய பாகிஸ்தான், பங்களாதேஷ், நியுசிலாந்து மற்றும ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு வந்து இந்தியாவோடு விளையாடி பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று மற்ற போட்டிகளில் விளையாடின. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மேல் விமர்சனங்களும், இந்த ஹைபிரிட் மாடல் இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.