முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம்: அசத்திய மயங்க் அகர்வால்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (08:41 IST)
இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் தொடங்கிய நிலையில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்களான முரளிவிஜய், கே.எல்.ராகுல் ஆகியோர்களுக்கு பதிலாக விஹாரி, மயங்க் அகர்வால் களமிறங்கினர். விஹாரி 8 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தாலும், அகர்வால் நிதானமாக விளையாடி 112 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்து விளையாடி வருகிறார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை சேர்ந்த 27 வயதான மயங்க் அகர்கர், ஐபிஎல் டெல்லி அணி, பஞ்சாப் அணி, புனே அணி மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்