இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, அஸ்வின் இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரெட்' மற்றும் துபாயின் 'ஐஎல்டி20' ஆகிய வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாட ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. அஸ்வின் இதுவரை 333 டி20 போட்டிகளில் 317 விக்கெட்டுகளையும், 1,233 ரன்களையும் எடுத்துள்ளார்.