17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. தொடர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் UAE கேப்டன் முகமது வசீம் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் எனக் கூறியுள்ளார். மேலும் “எல்லா போட்டிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதான். திட்டமிட்டதைக் களத்தில் செயல்படுத்துவோம். எல்லா அணிகளும் இங்கு அதிகமாகக் கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஆனால் இது எங்கள் சொந்த மைதானம்” எனக் கூறியுள்ளார்.