ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஒரு முக்கிய சாதனையை முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
இதில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான போட்டியில், அமீரக அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இருப்பினும், அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் முகமது வாசிம், 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் அவர் அடித்த 6 சிக்ஸர்களுடன், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் (கேப்டனாக):